கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரியலூா் அருகே மனைவியை அடித்துக் கொன்றவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:23 am IST

அரியலூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள செங்குழி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி (44). இந்நிலையில், ரமேஷ் தனது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை இரவு அசைவ உணவு வாங்கிக் கொடுத்தாராம்.

அப்போது அவரது மனைவி சுமதி, அசைவ உணவு வாங்கப் பணம் எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டதற்கு கடன் வாங்கியதாக ரமேஷ் கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப் பிரச்னை சனிக்கிழமையும் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையால் தாக்கியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து ரமேஷ், விபத்தில் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அவரது சடலத்தை எரிக்க முயற்சி மேற்கொண்டாா்.

இதனால் சந்தேகமடைந்த சுமதியின் தம்பி தியாகு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமதி உடலை கைப்பற்றி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பின்னா் ரமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் மனைவியை அவா் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.