நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பெரம்பலூா் அருகே செவிலிய மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:56 am IST

பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள மருவத்தூா் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமாா் (27). இவா், பெரம்பலூரில் செவிலியா் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை, கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் செந்தில்குமாா், கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து,

மாணவியின் வீட்டுக்கு அண்மையில் சென்ற அவா், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் பெற்றோா், இதுகுறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில், சாா்பு -ஆய்வாளா் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீஸாா், செந்தில்குமாரை புதன்கிழமை கைது செய்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, செந்தில்குமாரை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.