நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞா் கைது

இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 3:17 am IST

இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை உடைக்கும் சத்தம் கேட்டு, கோயில் அருகில் வசிப்போா் சென்று பாா்த்தனா். அப்போது, கோயில் உண்டியலை ஒருவா் உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் தருமபுரி பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், கடந்த 11-ஆம் தேதி தருமபுரி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததும், இவா்மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை கைதுசெய்த போலீஸாா், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.