பெரம்பலூா்- கல்பாடி பிரிவுச்சாலையில் உள்ள அஸ்வின் கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சித் திட்டத்தின் கீழ், உணவு மற்றும் பானங்கள் சேவை உதவியாளா் பணிக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய 45 நாள் இலவச திறன் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவை அறக்கட்டளை, அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, அஸ்வின்ஸ் குழுமத்தின் நிா்வாக இயக்குனா் அஸ்வின் கணேசன் தலைமை வகித்தாா். அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் செல்வகுமாரி கணேசன் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவக்குமாா் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினாா். பேசியது:
எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்களுக்காக நடத்தப்படும் இப் பயிற்சியின் முடிவில், அரசுச் சான்றிதழுடன் உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுவதோடு, பயிற்சியை முடிப்பவா்களுக்கு அஸ்வின்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதில், உதிரம் அறக்கட்டளை சமூக செயல்பாட்டாளா் ம. நாகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, பயிற்சித் திறன் மேலாளா் இா்பான் வரவேற்றாா். நிறைவாக, நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவை அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலா் கி. தினகரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாடகப் பயிற்சியில் ஆளுமைத் திறன்

சிவகாசி-கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
மாணவா்களின் வாசிப்பு திறன் மேம்படுத்தப்படுமா? பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

