ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நாடகப் பயிற்சியில் ஆளுமைத் திறன்

அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையாக நாடகங்கள் திகழ்ந்ததால், நாடகக் கலைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:01 am IST

அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களில் முதன்மையாக நாடகங்கள் திகழ்ந்ததால், நாடகக் கலைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் திரைப்படங்கள் வந்தவுடன் நாடகங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து, நலிவடையும் நிலையில் உள்ளது.

இந்தக் கலையை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களுக்கு ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காகவும் தஞ்சாவூர் அரசு உதவி பெறும் அரசர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவியருக்கு ஒரு மாத நாடகப் பயிற்சி மே 19 -ஆம் தேதி முதல் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய நாடகப் பள்ளி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியன இணைந்து மற்ற மாநிலங்களில் அளிக்கப்பட்டு வந்த இந்தப் பயிற்சி தமிழ்நாட்டில் முதல் முறையாக இங்கு நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சி குறித்து முகாம் இயக்குநர் அபிஷேக் கார்க் கூறியது:

'மக்கள், பொதுவாக தங்களுக்குப் போதிய வசதிகள் இல்லாததால், முன்னேற்றம் அடைய முடியவில்லை எனக் குறைபட்டுக் கொள்கின்றனர். இப்படியொரு மனக் குறையைப் போக்குவதற்காக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் சிறு வயது வாழ்க்கை பயணத்தை கருப்பொருளாகக் கொண்டு நாடகத்தை உருவாக்கியுள்ளோம்.

'குறை சொல்லும் மக்களிடம், இப்போது நீங்கள் புகார் செய்கிறீர்கள். ஆனால், 1931-இல் ஒருவர் பிறந்தார்; அவர் எதற்கும் குறை கூறவில்லை; அவர் தனது இலக்கை நோக்கிச் சென்றார்; இறுதியில் நம் நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்' என ஊக்கமளிக்கும் கதையை நாடகமாகச் சொல்கிறோம்.

முக்கியமாக ஆளுமைத் திறன் மேம்பாடு, தன்னம்பிக்கையை வளர்த்தல், தெளிவான தகவல் தொடர்பு போன்றவற்றைக் கற்றுத் தருகிறோம். அதன் பிறகு உடல் கட்டுப்பாடு, உடல் அசைவுகள், குழுவாக இணைந்து செயல்படும் பயிற்சி, நடிப்புத் திறன், குரல் வளம்,

உச்சரிப்பு மாற்றம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நடிப்பின் நான்கு முக்கியமான அம்சங்களான உடல் மொழி, பேச்சு - வசனம், உடை - ஒப்பனை, மன உணர்வுகளைப் பயிற்றுவிக்கிறோம்.

மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ என எந்தத் துறைக்குச் சென்றாலும் முழுத் தன்னம்பிக்கையுடனும், சிறந்த தகவல் தொடர்புத் திறனுடனும், மற்றவர்களுடன் ஒத்துழைத்துச் செயல்படும் குழு மனப்பான்மையுடனும் திகழ வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் அடிப்படை நோக்கம்.

பயிற்சியில் பங்கேற்கும் சில மாணவர்களுக்கு இயல்பாகவே நடிப்புத் திறன் இருக்கிறது. அவர்களை மெருகேற்ற முயல்கிறோம். எதிர்காலத்தில் 10 பேராவது நாடகம், திரைப்படத் துறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

இந்த முகாம் முடிவடைந்ததும், ஜூன் 16-இல் ஒரு உள்ளூர் காட்சியை நடத்துவோம். பின்னர், 19-இல் ஒட்டுமொத்தக் குழுவும் தில்லிக்குச் செல்லும்.

21-இல் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் இதே நாடகத்தை அரங்கேற்றுவோம். ஜூன் 22-இல் இந்த முகாம் நிறைவடையும். குழந்தைகளுக்கு நாடகத்தில் பங்கேற்க வாய்ப்பளிப்பதும், அவர்களிடையே ஆளுமைத் திறனை வளர்ப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்'' என்கிறார் அபிஷேக் கார்க்.

தேசிய நாடகப் பள்ளி நூலகர் இ. கஜலட்சுமி கூறுகையில், 'தேசிய அளவில் 8 இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு இத்தகைய உயரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. விளையாட்டு மூலம் கற்பிக்கும் வகையில் செயற்கை முறை கற்றல் வழியாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் கற்க வேண்டியதை எளிதாகப் புரிந்து கொள்வர்'' என்கிறார் கஜலட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.