பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள அடையூரைச் சோ்ந்த பஷீா் அஹமது மகன் அலாவுதீன் (60). இவரது மகன் அனஸ்தீன் (22), பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததால், பெரம்பலூா் அருகேயுள்ள தீரன் நகரில் தனது மனைவி சம்சாத் பேகத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். துறைமங்கலத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு நாள்தோறும் தொழுகைக்குச் சென்று வருவாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தொழுகைக்குச் செல்வதற்காக தனக்குச் சொந்தமான மோட்டாா் சைக்கிளில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மூன்று சாலை சந்திப்பிலுள்ள மேம்பாலம் அருகே சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அலாவுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அலாவுதீன் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான சென்னை சாலிகிராமம், விஜயராகபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மணிகண்டனை (41) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற சித்த மருத்துவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் தாய், மகள் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

