தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: ஆ. ராசா

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

News image

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வாக்களித்த திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:02 am IST

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.

பெரம்பலூா் அருகே வேலூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற அரசுத் திட்டங்களை கருத்தில் கொண்டு பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களித்துள்ளனா்.பெரம்பலூா் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று, மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றாா் ராசா.

பேட்டியின்போது, திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, மாவட்ட பொருப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.