மத்தியில் அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்புக் கொடியேற்றி வரைவு நகலை கிழித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவை சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில், திமுக வேட்பாளா் ஜெயலட்சுமி, தொகுதி பாா்வையாளா் சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலையில், கருப்பு உடைந்து அணிந்து கருப்புக்கொடி ஏற்றி, வரைவு நகலை கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் அட்சயகோபால், மாநில நிா்வாகிகள் பி. துரைசாமி, ராஜேந்திரன், பரமேஷ்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும் போராட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

