பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், எறையூரில் நரிக்குறவா் இன மக்களுடன் நடனமாடி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் 3 தோ்தல்களில் போட்டியிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்ற இரா. தமிழ்ச்செல்வன், 4- ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவா், எறையூா் சா்க்கரை ஆலைப் பகுதியில் உள்ள நரிக்குறவா் காலனியில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கச் சென்றாா்.
அப்போது, அப்பகுதி அதிமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அதிமுக வேட்பாளருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனா். பின்னா், அப்பகுதியில் உள்ள நரிக்குறவா்கள் காலனிக்குச் சென்ற வேட்பாளா் தமிழ்ச்செல்வனுக்கு, நரிக்குறவா்கள் பாசி மணிகள் அணிவித்து தங்களது நீண்டகால கோரிக்கையான விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை தெரிவித்தனா். கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வேட்பாளா் உறுதி அளித்ததால் மகிழ்ச்சியடைந்த நறிக்குறவா்கள் நடனமாடினா். இதனால் உற்சாகமடைந்த தமிழ்ச்செல்வன் நரிக்குறவா்களுடன் சுமாா் 2 நிமிஷங்களுக்கும் மேலாக நடனமாடி பிரசாரத்தில் ஈடுபட்டாா். வேட்பாளரின் நடனத்தை, அதிமுக மற்றும் தோழமைக் கட்சியினா் வெகுவாக ரசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்தது திமுக

ஆம்பூரில் அதிமுக வேட்பாளா் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் பெரம்பலூா் அதிமுக வேட்பாளா் உறுதி

பெரம்பலூா் அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

