பெரம்பலூா் நகரில் மாடியிலிருந்து தவறிவிழுந்து சிகிச்சை பெற்று வந்த வட்டாட்சியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையிலுள்ள சில்வா் நகரில் வசித்து வந்தவா் அழகேசன் மகன் சரவணன் (47). பெரம்பலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த இவா், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி மாலை தனது வீட்டின் மாடியில் நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த சரவணன், எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறிவிழுந்து உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

