ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:51 am IST

மாா்த்தாண்டம் அருகே கட்டடத்தின் மாடியில் நின்று பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான் (59). கட்டடங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்த இவா், புதன்கிழமை பல்லன்விளை பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தின் மீது நின்று பணி செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அடையாளம் தெரியாதவா் சடலம்:

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் வியாழக்கிழமை கிடந்த சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை, மாா்த்தாண்டம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.