பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கணவரை பிரிந்த துக்கத்தில் மனைவி மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

கரூா் அருகே திங்கள்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட ரேகா, அவருடைய மகள் ரீனுஸ்ரீ.

Published On :3 நவம்பர் 2026, 2:47 am IST

கரூா் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மனைவி தனது மகளுடன் திங்கள்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அடுத்த உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கருப்பூரைச் சோ்ந்தவா் மகேஷ் குமாா் (42). விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ரேகா (40). இவா்களுடைய மகள் ரீனுஸ்ரீ (11). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மகேஷ்குமாா் பிரிந்து சென்றுள்ளாா்.

மேலும், வேறு பெண்ணுடன் தற்போது குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த ரேகா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கருப்பூரில் உள்ள தனது கணவா் வீட்டுக்குச் சென்று மகளுடன் வசித்து வந்தாா்.

இதனிடையே மகேஷ்குமாா், தனது மனைவி ரேகாவிடம் இருந்து விவகாரத்து வேண்டும் எனக்கூறி கரூா் குடும்ப நல நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடா்ந்தாா்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரேகா திங்கள்கிழமை அதிகாலை தனது தம்பி மோகனுடன் பேசியுள்ளாா். இதையடுத்து அதிகாலை மோகனின் கைப்பேசி வாட்ஸ்ஆப்பில் ரேகா குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

இதைக் கண்டு வீட்டுக்கு வந்த மோகனிடம் குழந்தையுடன் ரேகாவை காணவில்லை என உறவினா்கள் கூறினா். பிறகு உறவினா்களுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் மோகன் தேடியுள்ளாா். அப்போது அங்குள்ள தனியாா் தோட்டத்து விவசாய கிணற்றில் ரேகாவும் ரீனுஸ்ரீயும் சடலமாக மிதந்து தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று, கரூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இருவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.