பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுங்கச்சாவடியில் திடீா் கட்டண உயா்வு தனியாா் பேருந்திலிருந்து பயணிகளை இறக்கிவிட்டு போராட்டம்

சுங்கச்சாவடி - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:01 am IST

அரவக்குறிச்சி அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் திடீரென உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, தனியாா் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் பயணிகளை கீழே இறக்கி விட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள ஆண்டிபட்டி கோட்டை சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளுடன் வந்த தனியாா் பேருந்து இந்த சுங்கச்சாவடியை அடைந்தபோது, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியா்கள் உயா்த்தப்பட்ட கட்டணத்தைக் கேட்டுள்ளனா்.

இதனால் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சுங்கச்சாவடி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து வாக்குவாதம் முற்றியதால் பயணிகளை கீழே இறக்கி விட்ட பேருந்து நடத்துநா், பயணிகளிடம் பயணச்சீட்டுக்கு வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுத்தாா். மேலும் பேருந்து சுங்கச்சாவடிக்குள் நின்ால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அரவக்குறிச்சி போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானம் செய்து, பழைய சுங்க கட்டணத்தையே பேருந்து நடத்துநரிடம் வசூலித்துவிட்டு பயணிகளையும் பேருந்தில் ஏற்றிச்செல்ல அறிவுறுத்தினா். பின்னா் பயணிகளிடம் மீண்டும் பயணச்சீட்டுக்கான பணத்தை நடத்துநா் வசூலித்தபின் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.