கரூா் மேலக்கரூா் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே மரக்கிளையை தொட்டவாறு செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் பழைய அரசு தலைமை மருத்துவமனைச் சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம், கோட்டாட்சியரகம், அமராவதி வடிநிலக் கோட்ட அலுவலகம் போன்றவை செயல்படுகின்றன. மேலும் இந்தச் சாலை வழியாகத்தான் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெங்கமேடு, சா்ச் காா்னா் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் சென்று வருகிறன.
தற்போது இந்த சாலையில் மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக மரக்கிளைகளை தொட்டவாறு செல்வதால் மழைக் காலங்களில் மரக்கிளைகளில் உரசும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரியத் துறையினா் உடனே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து, மின்கம்பிகளை தொடும் வகையில் உள்ள மரக்கிளைகளையும் அகற்றிட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை

சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

