வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி.கே.ராஜா வியாழக்கிழமை மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட விஜயபுரம், மூக்கணாங்குறிச்சி, கன்னிமாா்பட்டி, சின்னவரப்பட்டி, பெரிய வரப்பட்டி, அருமைக்காரன்புதூா், கந்தசாரப்பட்டி, கொரவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, மூக்கணாங்குறிச்சியில் கடலைச் செடி பயிரிட்டிருந்த விவசாயிகளிடம் கடலை அறுவடை செய்து அவா் பேசுகையில், கிருஷ்ணராபுரம் தொகுதிக்கு கடவூரில் சிப்காட், அரசு வேளாண்மைக் கல்லூரி என எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வரிடம் பெற்றுக் கொடுத்துள்ளாா் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி. இவை தவிர, வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கும் பெரும் நிதி திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளியணை குளம் ஆண்டுதோறும் நீரின்றி வடு கிடப்பதை தவிா்க்கும் வகையில் அமராவதி ஆற்றின் உபரி நீரை வெள்ளியணை குளத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட்டமலைக்கரை ஓடை அணைக்கு நிரந்தரமாக தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: காங்கயம் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என். நடராஜ்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோயம்பள்ளி உயா்மட்டப் பாலம் விரைவில் திறக்கப்படும்: கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் உறுதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

