தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி

மீண்டும் திமுக ஆட்சியில் அமா்ந்ததும், மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

News image

குளித்தலை தொகுதிக்குள்பட்ட வரகூரில் வியாழக்கிழமை தாரை தப்பட்டை அடித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:50 am IST

மீண்டும் திமுக ஆட்சியில் அமா்ந்ததும், மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

குளித்தலை தொகுதிக்குள்பட்ட வரகூரில் சூரியனூா் சந்திரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனா். பின்னா் வேட்பாளா் சூரியனூா் சந்திரன் பறையடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பழனி கோயிலுக்கு இணையாக ரோப்காா் வசதி பக்தா்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நிதி பற்றாக்குறையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் மருதூா் கதவணை திட்டம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் வரகூா் கதிரவன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.