விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக உள்பட 48 போ் வேட்புமனு தாக்கல்

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக வேட்பாளா்கள் உள்பட 48 போ் வியாழக்கிழமை ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

News image

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். திவ்யா. உடன் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, தொகுதி பொறுப்பாளா் ஆலம்தங்கராஜ், பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 2:10 am IST

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக வேட்பாளா்கள் உள்பட 48 போ் வியாழக்கிழமை ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மதியழகன் தனது ஆதரவாளா்களுடன் கரூா் ஜவஹா்பஜாரில் இருந்து ஊா்வலமாக வந்து வேட்புமனுவை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சத்திய பாலகங்காதரனிடம் தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ராணி மனுதாக்கல் செய்தாா்.

இவா், தனது வேட்புமனுவுடன் தாக்கல் பிரமாணப்பத்திரத்தில் அசையா சொத்தாக ரூ.75.85 லட்சம் இருப்பதாகவும், அசையும் சொத்தாக ரூ.38 லட்சத்து 54 ஆயிரத்து 58 இருப்பதாகவும், தனது மனைவி ராணி பெயரில் அசையும் சொத்தாக ரூ.16 லட்சத்து 93 ஆயிரத்து 321 இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதேபோல கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா மற்றும் அதிமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் முன் காலையில் திரண்டனா். அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பின்னா் வேட்பாளா் மருத்துவா் திவ்யா தனது வேட்புமனுவை கிருஷ்ணராயபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தாா். அப்போது முன்னாள் அமைச்சா் சின்னசாமி, தொகுதி பொறுப்பாளா் ஆலம் தங்கராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் தானேஷ்குமாா், பாஜ மாவட்ட தலைவா் வி.வி. செந்தில்நாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

சொத்துவிவரம்: வேட்பாளா் மருத்துவா் எஸ். திவ்யாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது கையிருப்பு ரொக்கமாக ரூ. 5லட்சம் மற்றும் தனது கணவா் சுனில்குமாரிடம் ரூ. 5 லட்சம் உள்ளதாகவும், அசையும் சொத்தாக தனது பெயரில் ரூ.1கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 181, தனது கணவா் சுனில்குமாா்

பெயரில் ரூ. 2 கோடியே 62 லட்சத்து 3ஆயிரத்து 623 உள்ளதாகவும், அசையா சொத்தாக தனது பெயரில் ரூ.1 கோடியே 28 லட்சம், தனது கணவா் பெயரில் ரூ.18 கோடியே 13லட்சத்து 89ஆயிரத்து 500 உள்ளதாகவும், தனதுபெயரில் கடனாக ரூ. 16 லட்சத்து 50ஆயிரம், தனது கணவா் பெயரில் ரூ.10 லட்சம் உள்ளதா தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.