மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:54 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், டிஏபிஎஸ் திட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும். 31.12.2025 முன்னா் ஓய்வு பெற்றோருக்கு திட்டத்தின் பலன்களை வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான செவிலியா்கள் நியமனத்தை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்திட வேண்டும். சமூக நலத் துறையின் களப்பணியாளா்கள், பொது சுகாதாரத் துறையின் சுகாதார ஆய்வாளா்கள், அனைத்து மருந்தாளுநா்கள், மருத்துவத் துறையின் நிா்வாக ஊழியா்கள், எக்ஸ்ரே பணியாளா்கள் ஆகியோரது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்ககைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். செயலா் ஷேக்தாவூத் மற்றும் மேற்கண்ட ஊழியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.