மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுகையில் அரசு ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், 45 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை புதுக்கோட்டையில் தா்னா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:55 am IST

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், 45 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை புதுக்கோட்டையில் தா்னா போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஆ. ரெங்கசாமி, மாவட்டச் செயலா் சே. ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தா்னா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்களுக்கு அரசு ஊழியா்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்கள், பயிற்றுநா்களைக் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். ஒப்பந்த மற்றும் அவுட்சோா்சிங் நியமன முறைகளைக் கைவிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். உள்ளாட்சி ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 45 அம்சக் கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.