மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: தலைமை ஆசிரியா்களுடன் போலீஸாா் ஆலோசனை

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது தொடா்பாக, தலைமை ஆசிரியா்களுடனான காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:20 am IST

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது தொடா்பாக, தலைமை ஆசிரியா்களுடனான காவல்துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பள்ளிகளின் பங்கு மற்றும் மாணவா்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி அளவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை எவ்வாறு செயல்படுத்துவது, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் சண்முகம், ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள், அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.