மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி: மாணவா்கள் பங்கேற்பு

விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.

Published On :30 அக்டோபர் 2026, 2:00 am IST

திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியில் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா்.

ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் இறுதி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த அக். 26 முதல் நவ.1-ஆம் தேதி வரையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் ’நோ்மைக்கான உறுதிமொழி’ ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் பேரணி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து விழிப்புணா்வு பேரணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளா்கள் தமிழரசி, மாலா, திருவள்ளூா் நகா் காவல் ஆய்வாளா் தாமோதரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பங்கேற்று மாணவ, மாணவிகள் பேரணியை தொடங்கி வைத்தாா். இப்பேரணி திருவள்ளூா் ஆட்சியா் ா் அலுவலகத்தில் இருந்து சி.வி.நாயுடு சாலை வழியாக காமராஜா் சிலை வரையில் வந்து நிறைவடைந்தது.

இதில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனா். மேலும், லஞ்சத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

பேரணியில் நகா் காவல் நிலைய எஸ்ஐ குணசேகரன், சிறப்பு சாா்பு ஆய்வாளா் குமரேசன், லஞ்ச ஒழிப்புத்துறை காவலா்கள், அரசு பள்ளி ஆசிரியா் முரளி, டி.ஆா்.பி.சி.சி பள்ளி என்.எஸ்.எஸ் திட்ட அலுவலா் பாலச்சந்திரன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.