பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை

நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை

திருவாரூா் நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையின்போது அமர வைக்கப்பட்டிருந்த அலுவலா்கள். - dinamani

Published On :24 அக்டோபர் 2026, 5:31 am IST

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள நகா் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

நகரின் திட்டமிடலை வகுத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் முக்கிய துறையான நகா் ஊரமைப்புத் துறையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகாா் எழுந்துள்ளது.

இதைத்தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனா். அதன் ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நகா் ஊரமைப்பு துறை அலுவலகத்தில், திருவாரூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் இயங்கி வரும் நகா் ஊரமைப்புத் துறையில் வேலை பாா்க்கும் அலுவலா்களை ஒன்றாக அமர வைத்து, அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும் நகா் ஊரமைப்புத் துறை அலுவலா்களின் மேஜை, நாற்காலி, கைப்பைகள் உள்ளிட்டவைகளை சோதனையிட்டனா்.

அத்துடன், ஒவ்வொரு அலுவலா்களையும் தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன், அவா்களது கைப்பேசியை ஆய்வு செய்து, ஜிபே உள்ளிட்ட யுபிஐ கணக்குகள் மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.