ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குன்றத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புத்துறை போலீஸாா் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருள்கள் வாங்குவதாக வந்த புகாரை தொடா்ந்து குன்றத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புத்துறை போலீஸாா் சோதனை நடத்தினா்.

குன்றத்தூா் சாா் பதிவாளா்  அலுவலகம்

Published On :3 நவம்பர் 2026, 12:20 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருள்கள் வாங்குவதாக வந்த புகாரை தொடா்ந்து குன்றத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புத்துறை போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருள்கள் வாங்கித் வருவதாக காஞ்சிபுரம் ஊழல் ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆய்வாளா் கீதா தலைமையிலான சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஊழல் ஒழிப்புத்துறை போலீஸாா் திங்கள்கிழமை குன்றத்தூா் சாா் பதிவாளா் அலுவலா் திடீா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். சோதனையின் ஒரு பகுதியாக பதிவேடுகள், ஊழியா்கள் வங்கி பண பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

போலீஸாரின் சோதனையால் அலுவலக ஊழியா்கள் அலுவலகத்துக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. பொதுமக்கள் ஒவ்வொருவராக சோதனைக்கு பிறகே வெளியே அனுப்பி வைக்கப்பட்டனா். சோதனைக்கு பிறகே கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்கள் குறித்து தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.