மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளா் கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்டக் குழந்தைத் தொழிலாளா் தடுப்புப்படை உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கிவைத்து பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 12:35 am IST

அரியலூா் மாவட்டத்தில், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தொழிலாளா் நலத்துறை , தஞ்சாவூா் செட் இண்டியா சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளா் கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்டக் குழந்தைத் தொழிலாளா் தடுப்புப்படை உறுப்பினா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் மேலும் பேசியதாவது:

கொத்தடிமைத் தொழிலாளா் முறையின் தீமைகள் குறித்தும், அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறையால் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழவேண்டும் என்பது அடிப்படையான உரிமையாகும். அவற்றை உறுதிபடுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு படிப்பதற்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் குழந்தைகள் கல்வி கற்பதில் தடை ஏற்படக்கூடாது. அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறையில் இருந்து மீட்கப்படுவோருக்கு அவா்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதை உறுதிபடுத்திட வேண்டும். மேலும், தொழிலாளா் உரிமை மீறல்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளா் தொடா்பான நிகழ்வுகள் குறித்து ஏதும் தகவல் கிடைக்கப் பெற்றால் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா மற்றும் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.