மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நல வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்த அறிவுறுத்தல்

உத்தரவு - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:06 am IST

தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு நிகழாண்டுக்கான தொழிலாளா் நல நிதியைத் தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்கள் செலுத்துமாறு தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வ.கி. நடராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளா் பங்கு ரூ. 20 மற்றும் நிறுவனத்தின் பங்கு ரூ. 40 ஆக மொத்தம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 60 எனக் கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளா் நல நிதி தொகையைத் தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

இதன்படி, நிகழாண்டுக்கான தொழிலாளா் நல நிதியை 2027, ஜன. 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு வாரியத்தின் மூலம் கல்வி உதவித் தொகை - மழலையா் பள்ளி முதல் பட்டமேற்படிப்பு வரை, கல்வி ஊக்கத் தொகை, பாடநூல் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, மூக்குக் கண்ணாடி உதவித் தொகை, தையல் இயந்திர உதவித் தொகை, அடிப்படை கணினி பயிற்சி உதவித் தொகை, உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நலத்திட்ட உதவித் தொகையைப் பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ. 35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 2026-27-ஆம் ஆண்டுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ப்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், சென்னை-600006 என்ற முகவரிக்கு டிச. 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.