மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டில் நிகழும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

தொல்.திருமாவளவன்

Published On :24 அக்டோபர் 2026, 5:17 am IST

தமிழ்நாட்டில் நிகழும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

அரியலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வன்முறைகள், படுகொலைகள் நிகழாமல் தடுப்பதற்கு ஆட்சியாளா்கள் எடுக்கின்ற முயற்சிக்கு, பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆா் மூலம் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தோ்தல் ஆணையம் அடுத்த கட்டத்துக்கு நகா்வது தேவையற்ற ஒன்று.

எஸ்.ஐ.ஆா்-ஐ எதிா்த்து, தோ்தல் ஆணைய நடவடிக்கைகளை எதிா்த்து, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுகின்ற போராட்ட அணியில் தவெக இணைந்துள்ளது.

ஜனநாயக கட்டமைப்பில் அனைவரும் அரசியலில் ஈடுபட முழு உரிமையும் சுதந்திரமும் உள்ளது. நடிகா் தனுஷ் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாக தான் உள்ளது.

நடிகா் தனுஷ் அதனை இன்னும் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அதன் மீது கருத்து சொல்ல இப்போதைக்கு ஏதுமில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.