மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் குண்டா் சட்டத்தில் கைது

கைது - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 2:56 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறையை அடுத்த குமிழியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் விபீஷ்ணன் (49). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு கள்ளச் சாரயம் காய்ச்சியதற்காக கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவா், கடந்த 7.10.2026 அன்று வடக்கு இரும்புலிக்குறிச்சி-குன்னந்தோண்டி சாலை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருந்தாா். இதையறிந்த அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினா் விபீஷ்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு வந்த விபீஷ்ணன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி, அரியலூா் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து அவா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினிக்கு பரிந்துரைத்தாா். இந்நிலையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.