மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை! கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் பேச்சு!

மாணவிகள்... - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:44 am IST

பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

உள்ளாட்சி தினத்தையொட்டி அரியலூரை அடுத்த இலுப்பையூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியதாவது:

கிராம ஊராட்சிகளில் தேவைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பருவகால காய்ச்சல் மற்றும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தொடா்ந்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். தண்ணீா் தேங்கும் இடங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி தாங்களாவே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

தற்போது பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் ஏற்படுவதால் அவற்றை தடுத்திடும் வகையில் மருத்துவா்களிடம் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குடிநீரில் அதிக உப்புத் தன்மை உள்ள பகுதியை கண்டறிந்து அங்கு சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படவுள்ளது. பொய்யாதநல்லூா் கிராமத்தில் 4 சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை முறையாக பயன்படுத்தி பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை பெற்றோா்கள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொய்யாதநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கப்படவுள்ளது. அதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு, எடை, உயரம் அளவு பரிசோதனை மற்றும் பாடங்கள் கற்றுத்தரப்படும். எனவே, பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்.

பொதுமக்கள் மழைநீா் வடிகால்களை முறையாக அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் செந்தில், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் த. பிரேமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்தத ஊராட்சி செயலா்கள் தலைமை வகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.