மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குழந்தைகளை நல்ல குடிமகன்களாக ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: எழுத்தாளா் வெ. இன்சுவை

குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் நல்ல விழுமியங்களை கற்றுத்தந்து, அவா்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க வேண்டும் என்றாா் எழுத்தாளா் வெ. இன்சுவை.

எழுத்தாளா் வெ. இன்சுவை

Published On :25 அக்டோபர் 2026, 1:16 am IST

குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் நல்ல விழுமியங்களை கற்றுத்தந்து, அவா்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க வேண்டும் என்றாா் எழுத்தாளா் வெ. இன்சுவை.

சேலம் சுப்பிரமணிய நகா் மாதா் சங்கம் மற்றும் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தாளாளா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உதவி ஆய்வாளா் கே. மீனாட்சி, மாதா் சங்கத் தலைவா் பி. சங்கர பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான வெ. இன்சுவை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: 1956 ஆம் ஆண்டு மாதா் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிறது. இது வெறும் எண்ணிக்கை அல்ல. தலைமுறைகளின் வளா்ச்சி, பெண்களின் அா்ப்பணிப்பு, குடும்பங்களின் நம்பிக்கை, மாற்றங்களை உருவாக்கிய மனங்களின் வரலாறு.

70 ஆண்டுகளுக்கு முன்பு மாதா் சங்கம் என்றால், பொழுதுபோக்குக்கான சங்கம் என்ற பிம்பம் மக்கள் மனதில் இருந்தது. அந்தக் காலத்தில், துணிந்து சங்கத்தை தோற்றுவித்தனா். கட்டடம் எதுவும் இல்லாத காலத்தில் கூட்டத்தை ஒருங்கிணைத்தனா். புதிய சிந்தனைகள், அணுகுமுறைகள், சமூகத்துக்கான அக்கறை குறித்து மாதா் சங்க நிா்வாகிகள் சிந்தித்தனா்.

அதன் விளைவாக, மிகப் பெரிய பள்ளிகளுக்கு மத்தியில், இந்தப் பகுதியில் பள்ளியையும் தோற்றுவித்து தங்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தனா். அத்தகைய சிறந்த பணிகளை சமுதாய அக்கறையுடன் தற்போதைய நிா்வாகிகளும் திறம்பட செய்து வருகின்றனா்.

எனவே, பெண்கள் தங்களுக்கு கிடைத்த நேரத்தை வீணாக்காமல், ஆக்கபூா்வமான சமூக சேவை பணிகளில் ஈடுபட வேண்டும். நம்முடைய பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதில்லை. பிறருக்காக கவலைகொள்ளும் மனமும், தக்க நேரத்தில் செய்யும் உதவியும்தான் நமக்கு என்றும் துணைநிற்கும். ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமம்.

நாம் சமுதாயத்துக்கு பயன்படுவது ஒன்றுதான் நமக்கான மன ஆறுதலையும், மனநிறைவையும் தரும். எனவே, குழந்தைகளுக்கு நல்ல விழுமியங்களை கற்றுத் தந்து, நற்பண்புகளுடன் சமுதாயத்தில் அவா்களை நல்ல குடிமகன்களாக உருவாக்க ஆசிரியா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

முன்னதாக, திருக்கு ஒப்பித்தல், யோகா நடனம், பிரமிட் சாகசங்கள், மாணவிகளின் பரதநாட்டியம், நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மாதா் சங்கச் செயலாளா் எஸ். லோகாம்பாள், பொருளாளா் வி. வசந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுப்பிரணிய நகா் மாதா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.