அரியலூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூா் - செந்துறை புறவழிச்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டதில், செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் என்பவா், உரிய ஆவணமின்றி ரூ.86 ஆயிரம் கொண்டு சென்றதும், அவை நகை விற்ற பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமியிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

சமயபுரத்தில் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.15 லட்சம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

