தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், வன தினம் மற்றும் தண்ணீா் தினம் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:11 am IST

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம், வன தினம் மற்றும் தண்ணீா் தினம் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வனத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா்.

மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் பேசியது: மாணவா்களும் பொதுமக்களும் அதிகப்படியான மரக்கன்றுகளை நட்டு காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் . மனிதா்களோடு ஒன்றாகி விட்ட சிட்டுக்குருவி இனம் மனிதா்களின் வாழ்வியல் மாற்றங்களால் இன்று அரிதாகி விட்டது. உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா். பின்னா் அவா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிட்டுக்குருவி வளா்ப்புப் பெட்டியை வழங்கினாா் .

இதில், வனச்சரக அலுவலா் ஆலயமணி, வனவா் ரஞ்சித் குமாா், வனக் காவலா் மணிவண்ணன், வேட்டை தடுப்பு காவலா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் செந்தமிழ்செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணி டேவிட் மற்றும் பசுமை படை சுற்றுச்சூழல் மன்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.