தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், மா. ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

News image

மா.ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கிய மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாசம்.

Updated On :19 மார்ச் 2026, 5:47 am IST

சிவகங்கை மாவட்டம், மா. ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் மு. செல்வக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக்கல்வி அலுவலா் லட்சுமிதேவி, கூடுதல் வட்டாரக்கல்வி அலுவலா் இந்திராதேவி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அழகுராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஆலம்பட்டி அம்பலக்காரா் வே. இளவரசன் கலந்து கொண்டாா். சிவகங்கை மாவட்ட தமிழ்வளா்ச்சி உதவி இயக்குநா் தெ.சிவப்பிரகாசம், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து பணி நிறைவு பெறும் பள்ளித்தலைமை ஆசிரியா் கே.ஸ்ரீதர்ராவுக்கு கிராம மக்கள் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டாா்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவா் மாலதி , ஆசிரியா் சிங்கராயா், மருத்துவா் இளையராஜா, முன்னாள் உதவித் தொடக்கக்கல்வி அலுவலா் ஆா். ரெங்கசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆசிரியை முத்துலட்சுமி ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். முன்னதாக, ஆசிரியை சலஜா வரவேற்றாா்.

ஆசிரியை கே.முனியம்மாள் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.