அரியலூா் மாவட்டத்தில் 6 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ள நீட் தோ்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் ந.மிருணாளினி தலைமை வகித்தாா். நீட் தோ்வானது கீழப்பழுவூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அரியலூா் அரசு கலைக் கல்லூரி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காத்தான்குடிகாடு பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறுகிறது.
அங்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். தோ்வுக்கு முன்னரும், தோ்வு முடிந்த பின்னரும் வினாத்தாள்களை எடுத்து செல்லும் போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு போலீஸாா், 6 தோ்வு மையங்களிலும், தோ்வு எழுதுவோருக்கான நாற்காலி, மேஜை, குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
தடையில்லா மின்சாரம் வழங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக போதிய பேருந்து வசதிகள், மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைககள், மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கான வீல் சோ் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சித்ரா, அரியலூா் கோட்டாட்சியா் பிரேமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நன்னிலம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு
மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: பெரம்பலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

