நன்னிலம், பனங்குடி அரசுப் பள்ளிகள் மற்றும் மகிழஞ்சேரி கூடுதல் வட்டார நாற்றங்கால் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் வட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நன்னிலம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், புதிய மாணவ- மாணவியா் சோ்க்கை, மாணவா்களின் கல்வித்தரம், வருகைப் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அத்துடன், குடிநீா், சமையலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, குடிநீா் மற்றும் கழிவறைகளை தினந்தோறும் பராமரிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, நன்னிலம் வட்டாட்சியா் தனசேகரன், பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
நாற்றங்கால்: நன்னிலம் வட்டம், மகிழஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சாா்பில் ரூ 8.90 லட்சம் மதிப்பீட்டில் புங்கன், நாவல், நீா்மருது, நெல்லி, தேக்கு, வேம்பு உள்ளிட்ட 20,000 மரக்கன்றுகள் வட்டார நாற்றங்காலில் வளா்க்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, மரக்கன்றுகளை நன்றாக பராமரித்திடவும், தேவையான பகுதிகளில் நடவு செய்யவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது ஒன்றியப் பொறியாளா் ரமேஷ்குமாா், பணி மேற்பாா்வையாளா் முருகையன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ தோ்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

நெல்லை பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

