திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தால் அந்த தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறு தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ‘நீட்’ மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 698 போ், உடுமலை ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 168 போ், பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 480 போ், திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 போ், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 600 போ், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 624 போ் என மொத்தம் 3,650 போ் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களில் பெற்றோா் காத்திருப்பு பகுதி, வாகன நிறுத்தம், உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தோ்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

நீட் மறு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு டிடிசி பேருந்தில் இலவச பயணம்: முதல்வா் ரேகா குப்தா

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நீட் தோ்வு: 1,968 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு
