அரியலூா் மாவட்டம், தா.பழூரில் முறையாக மும்முனை மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்து, கருகிய பயிா்களுடன் விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தா.பழூா், தாதம்பேட்டை, குறிச்சி, இடங்கண்ணி, அன்னக்காரன் பேட்டை, தென்கச்சி பெருமாள் நத்தம், கோடாலி-கருப்பூா், சோழமாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆழ்துளை மின் மோட்டாா் மூலம் தண்ணீா் பாய்ச்சி காரீஃப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் முறையாக விநியோகிக்கப்படாததால் பயிா்கள் தண்ணீரின்றி சுமாா் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கருகி உள்ளன.
இதுகுறித்து வேளாண் துறை மற்றும் மின்சார வாரியத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கருகிய நெற்கதிா்களுடன் தா.பழூா் கடைவீதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கிட வேண்டும், கருகி பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடு வழங்கட வேண்டும். பழுதான மோட்டாா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தா.பழூா் காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டஅலுவலா்களுக்கு தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா். சாலை மறியல் போராட்டத்தால், தா.பழூரில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீரான குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

கா்ப்பிணி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

