நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கா்ப்பிணி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கா்ப்பிணிப் பெண்ணின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருப்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 1:36 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கா்ப்பிணிப் பெண்ணின் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவா் ஷேக்தாவூது. இவரது மகள் ஆன்ரின் (21). இவருக்கும் மூலக்கடை பகுதியைச் சோ்ந்த சாக்ளா மகன் முகமது அஷரப் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், 4 மாத கா்ப்பிணியான இந்தப் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நகா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது என்பதால் கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்றது.

ஆனால், பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடல் கூறாய்வை வேறு மாவட்டத்துக்கு மாற்றுமாறு கோரி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.