அரியலூா் மாவட்டம், கீழப்பழுா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள், இயந்திரங்கள் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதற்காக இப்பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், 2 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் 28 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா் என 3 நபா்களும் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமி, ஜெயங்கொண்டம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மனோகரன், தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு பயிற்சி

5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

