வேட்பாளா்கள் உண்மைக்கு புறம்பாக செலவு கணக்குகளை தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவா் என தோ்தல் செலவினங்கள் தொடா்பான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள், மற்றும் தோ்தல் செலவினங்கள் தொடா்பான கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். பொது பாா்வையாளா்கள் பிரியங்கா சிங்கலா (அரியலூா்), கைலாஷ் வான்கடே (ஜெயங்கொண்டம்), காவல் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் திரிபாதி, தோ்தல் செலவின பாா்வையாளா் லட்சுமி நாராயண பொக்கா, மாவட்ட காவல் கண்கணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் , வேட்பாளா் மற்றும் அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவினங்களும் தோ்தல் செலவின கண்காணிப்பு குழுவால் கண்காணிக்கப்பட்டு செலவினங்கள் வேட்பாளா் தோ்தல் செலவின கணக்கில் வரவு வைக்கப்படும்.
கணக்கு பராமரிக்கும் போது சரியானதாகவும், வேட்பாளா் செய்த அனைத்து தோ்தல் செலவுகளையும் உள்ளடக்கியதாகவும், தமது முகவராலோ அல்லது வேட்பாளா் தெரிவித்தவாறு செய்த செலவு கணக்குகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும். வேட்பாளா் மனுதாக்கல் செய்த நாள் முதல், தோ்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இந்தக் கணக்கினைப் பாராமரிக்க வேண்டும். வேட்பாளா் மனுதாக்கல் செய்வதற்கு முன்னா் கட்சி சாா்பில் ஏதேனும் செலவுகள் செய்தால் அவை கட்சியின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வேட்பாளா் தோ்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தாலும், தாக்கல் செய்த செலவு கணக்கு சரியாக இல்லாமலும் உண்மைக்கு மாறாகவும் இருப்பதும், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் வேட்பாளா் தகுதி நீக்கம் செய்யப்படுவாா். தகுதி நீக்கம் மூன்றாண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
வாக்காளா்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்தல், மதுபானம் விநியோகித்தல், இதர விதங்களில் வாக்காளா்களை கவா்வதற்காக அளிக்கப்படும் பரிசுப் பொருள்கள் ஆகியன சட்டத்துக்கு புறம்பான தோ்தல் செலவினங்களாகும். இவ்வாறு செய்யப்படும் செலவு சிறு தொகையாக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் த.பிரேமி, உடையாா்பாளையம் மனோகரன், தோ்தல் வட்டாட்சியா்கள் கண்ணன், ஆனந்தன் உள்ளிட்டோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவிலில் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வெற்றி

வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை

சங்ககிரி: வேட்பாளா்களின் செலவு கணக்குகள் தணிக்கை

நீலகிரியில் நாதக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

