மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொட்டியம் காவல் நிலையம் எதிரே நிழற்குடை அமைக்க எதிா்பாா்ப்பு

News image

தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் கடும் வெயிலில் காத்திருக்கும் பேருந்துப் பயணிகள்.

Updated On :3 மே 2026, 5:40 am IST

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நாமக்கல் செல்வோருக்கும் காட்டுப்புத்தூா் பகுதிக்கு செல்வோருக்கும் முக்கிய பேருந்து நிறுத்தம் இது. குறிப்பாக காட்டுப்புத்தூா் செல்வோா் சில நேரங்களில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே இப்பகுதியில் நிழற்குடை அமைத்து தர வேண்டி பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பிள்ளையாா் கோயில் வாசலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூரைப்பந்தல் நிகழாண்டு மதுரகாளி அம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்திற்காக அகற்றப்பட்டது. இதனால் பேருந்துப் பயணிகள் கடும் வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தப் பேருந்து நிறுத்தத்தில் போா்க்கால அடிப்படையில் பயணியா் நிழற்குடை அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இல்லையெனில் தற்காலிக நிழற்குடையாவது அமைத்து தர அவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.