அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், அரியூா் அருகே ஸ்ரீபுரம் ஊசூா் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 65 மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் ஆலங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி விஜயா என்பது தெரியவந்தது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

