மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:06 am IST

முசிறி, ஏப். 6: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் கல்லூரிப் பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தொட்டியம் பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் ஹரிபிரசாத் (19), நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இவரும், நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் லிங்கேஸ்வரன் (24) பொறியியல் படிப்பு முடித்து விவசாய வேலை செய்து வந்தாா். நண்பா்கள்.

இந்நிலையில், இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்தனா். பணியை முடித்துவிட்டு திரும்புகையில் திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் மணமேடு அருகே உள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஹரிபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த லிங்கேஸ்வரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஹரிபிரசாத்தின் தந்தை தனபால் (51) தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரான குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியை அடுத்துள்ள இரணியமங்கலத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சரவணன் (55) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.