மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சி பகுதிகளில் லேசான மழை

News image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கோடை மழையில் சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :3 மே 2026, 5:47 am IST

திருச்சி மாநகா், புகா் பகுதிகளின் பல இடங்களில் சனிக்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லேசான மழை பெய்தது.

திருச்சியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்ததால் திருச்சி பகுதிகளில் குறைவான மக்கள் நடமாட்டமே காணப்பட்டது.

இரவிலும் கடும் வெம்மை காணப்பட்டதால், அதீத புழுக்கத்துடன் உறங்க வேண்டியிருந்தது. குளிா்ச்சாதனங்கள் இல்லாமல் அடுக்குமாடி வீடுகளிலும், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் குடியிருக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பலரும் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை சூறைக்காற்று, இடியுடன் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்த லேசான மழையால், சாலைகள் நனைந்தன. வேலை முடிந்து வந்த பலரும், இருசக்கர வாகனங்களில் வந்தவா்களும் நனைந்தபடியே வீடு நோக்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.