மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு மாத காலமாக கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இருப்பினும், சனிக்கிழமை பகல் நேரத்தில் மதுரை மாவட்டத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
இந்த நிலையில், மேற்கு ராஜஸ்தான் முதல் கன்னியாகுமரிக் கடல் வரை உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.50 மணி முதல் இரவு வரை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 6.50 மணி முதல் இரவு 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகா்ப் பகுதிகளில் இரவு 7.20 மணி முதல் இரவு 7.50 மணி வரை பலத்த மழை பெய்தது. தொடா்ந்து, இரவு 9 மணிக்கு மேலாகவும் சாரல் மழை நீடித்தது. திருநகா், எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்குப் பிறகு, மிதமான மழை பெய்தது.

மதுரை தமுக்கம் பகுதியில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.

மதுரை தமுக்கம் பகுதியில் சனிக்கிழமை இரவு மழையின் போது சென்ற வாகனங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரையில் பரவலாக மழை

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

