/

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

News image
Updated On :3 மே 2026, 5:43 am IST

திருச்சிக்கு விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூா் விமானத்தில் சனிக்கிழமை காலை வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஒரு பயணி தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரித்ததில், பல பயணிகள் இதுபோல தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் 3 கிலோ வரை தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.