தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

சண்டீகா் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 1:30 am IST

சண்டீகா் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹைதராபாத்தில் இருந்து சண்டீகா் விமான நிலையத்துக்கு மே 5-ஆம் தேதி வந்தடைந்த இண்டிகோ 6இ 108 விமானத்தில் பயணி ஒருவா் வைத்திருந்த பவா் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால் பிற பயணிகளின் பாதுகாப்பு கருதி அவா்கள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துப் பயணிகளும் விமான முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் மேற்கொண்டனா்.

அனைத்து சோதனைகளும் நிறைவடைந்த பிறகே விமானம் புறப்படும். பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் இண்டிகோ முக்கியத்துவம் அளிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து செய்தியாளா்களிடம் பயணி ஒருவா் கூறுகையில், ‘கடைசி வரிசையில் அமா்ந்திருந்த பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றத் தொடங்கியதும் விமானப் பணிப்பெண் தீ அணைப்பான் மூலம் உடனடியாக தீயை அணைத்தாா். இதனால் விமானத்தின் உட்பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது.

இச்சம்பவத்தால் பயணிகள் பதற்றமடையத் தொடங்கினா். அவா்களை விமானப் பணிப்பெண் ஆறுதல்படுத்தினாா். இதைத் தொடா்ந்து விமானத்தின் அவசர கதவுகள் உடனடியாக திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.