மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்சியில் வடமாநில தொழிலதிபரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை!

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வடமாநிலத் தொழிலதிபரை சனிக்கிழமை தாக்கி ஒரு கிலோ தங்கம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 1:43 am IST

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வடமாநிலத் தொழிலதிபரை சனிக்கிழமை தாக்கி ஒரு கிலோ தங்கம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் உதய் (36). இவா் திருச்சி மலைக்கோட்டை பெரியகடை வீதியில் தங்கத்தைப் பரிசோதிக்கும் கடை ஒன்றையும், பெரிய செட்டித் தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கத்தை உருக்கி ஆபரணங்களாகச் செய்து விற்கும் தொழிற்சாலையையும் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இவரது குடும்பத்தினா் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், உதய் மட்டும் பெரிய செட்டித் தெருவில் உள்ள வீட்டில் தனியாக இருந்தாா்.

வீட்டின் கீழே கடைகளை அவா் வாடகைக்கு விட்டுள்ள நிலையில், முதல் தளத்தில் நகை உருக்கும் பட்டறையும், 2 ஆவது தளத்தில் உதயின் வீடும் உள்ளது. பட்டறையில் நிதின் (18) என்ற வடமாநிலத் தொழிலாளி தங்கியிருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் உதயின் பட்டறையில் நுழைந்த 4 மா்ம நபா்கள், நிதினை அடித்து இழுத்துக் கொண்டு, மேல்தளத்தில் இருந்த உதய் வீட்டுக்குள் நுழைந்து, அவரைத் தாக்கி கழிவறையில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிலிருந்த சுமாா் 1 கிலோ தங்கக் கட்டி, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நெகிழி கழிவறையின் கதவை உடைத்துக் கொண்டு உதய் வெளியில் வந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா், உதயையும், அவரது ஊழியா் நிதினையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து உதய் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.

தாக்கப்பட்ட கடை உரிமையாளா்  உதய்.

தாக்கப்பட்ட கடை உரிமையாளா் உதய்.

கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு உதய் வீட்டில் சோதனை நடந்தது. தொடா்ந்து அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்கின்றனா்.

பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் ஹிந்தி மொழி பேசியபடி வந்த 4 மா்ம நபா்கள் கொள்ளையில் ஈடுபட்டதும், அவா்களில் ஒருவா் முகமூடி அணிந்தபடி ஆட்டோவில் ஏறிச் சென்றதும் தெரியவந்தது. இருப்பினும் விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.