மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

News image

திருவானைக்காவல் கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்திருவிழாவின் 5 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு தெருவடைச்சான் என்னும் பனை ஓலையில் கோபுரம் போல கட்டப்பட்ட சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் தனித்தனியாக எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தைச் சுற்றி திருவீதி வலம் வந்த சுவாமியும், அம்மனும்.

Updated On :20 மார்ச் 2026, 6:05 am IST

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தோ்களில் எழுந்தருளுகின்றனா்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5 வரை நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்ட விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி, நாள்தோறும் சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்புரிந்தனா்.

விழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் சுவாமியும்,அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். முன்னதாக இரு சிறிய தோ்களில் முருகனும்,விநாயகரும்,சண்டிகேசுவரருடன் எழுந்தருளுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.