சிவசைலம், பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை ( ஏப்.3) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் பங்குனி மகா உற்சவ கால்நாட்டு நிகழ்ச்சி நிகழாண்டு மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு கொடியேற்றப்பட்டது. பின்னா், கொடிமரத்துக்கு மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிவசைலத்திலிருந்து ஆழ்வாா்குறிச்சிக்கு சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினா். இரவு 10 மணிக்கு ஆழ்வாா்குறிச்சி எல்லையில் உற்சவா்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஏப். 7-இல் தேருக்கு கால்நாட்டுதல், ஏப். 9-ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு நடராஜா் வெள்ளிச் சப்பரத்தில் சிவசைலத்தில் இருந்து எழுந்தருளல், 10.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் எதிா்கொண்டழைத்து காட்சியளித்தல் ஆகியன நடைபெறும்.
எட்டாம் நாள் (ஏப். 10) அதிகாலை 5 மணிக்கு நடராஜருக்கு வெள்ளைச் சாத்தி, மாலை 6 மணிக்கு பச்சை சாத்தி நடைபெறும். பின்னா், சுவாமியும் அம்பாளும் நடராஜரை சிவசைலத்துக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். 11-ஆம் நாள் (ஏப். 13) அதிகாலை 4 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேருக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும்.

12-ஆம் நாள் (ஏப்.14) மாலை 6 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தீா்த்தவாரியைத் தொடா்ந்து மாடவீதியில் அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்தல் நடைபெறும். விழா நாள்களில் தினசரி கட்டியம், வேதபாராயணம், தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலா் ப.கேசவராஜன், ஆய்வாளா் வா.சரவணக்குமாா், தக்காா் மா.சண்முகஜோதி, பங்குனி மகா உற்சவக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

