செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

மண்ணச்சநல்லூா் அழகு நகா்பகுதியை சோ்ந்தவா் சு. சம்மனசுமேரி (65). இவரின் கணவா் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வரும் சம்மனசுமேரி கடந்த 3 நாள்களுக்கு முன்பு இலுப்பையூா் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் டிரஸ்ஸிங் டேபிள் அருகே வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் கிருபாநிதி தலைமையிலான போலீஸாா் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.